ஆப்பிள் சூப்
தேவையான பொருட்கள்-
ஆப்பிள் - 4
சர்க்கரை - 4
தேக்கரண்டி லவங்கப்பட்டை - 2துண்டுகள்
கிரீம் - அரை கோப்பை,
தண்ணீர் - 500மி.லி
தேன் - 1மேசைக்கரண்டி,
கார்ன் மாவு - 2தேக்கரண்டி,
எலுமிச்சம் பழத்தோல் - அரை தேக்கரண்டி.
செய்முறை-
ஆப்பிள் பழங்களின் தோலைச் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகள், எலுமிச்சம் பழத்தோல்; லவங்கப்பட்டை ஆகியவற்றுடன் தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும்.
எலுமிச்சம் பழத்தோலையும்,லவங்கப்பட்டையையும் நீக்கி விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கார்ன் மாவை அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை, தேன் மற்றும் கார்ன் மாவைச் சூப்போடு சேர்க்கவும் மிதமான தீயில் 5 நிமிடங்கள் கூட வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லென்று கீரிமுடன் பரிமாறவும்.
0
Leave a Reply