25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >>


2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது.  இவ்விருதாளர்  முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.

2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பங்கள் வரவேண்டிய கடைசி நாள் 20.12.2024 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News