தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் உலமாக்களுக்கு மானிய விலையில் புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 10 வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை உறுப்பினர் செயலர்/கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளர் உறுப்பினராகவும், மற்றும் மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளரை உறுப்பினராகவும் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட பயனாளிகள் உரிய விண்ணப்பத்துடன் வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி பட்டியல்/விலைப்புள்ளி, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வயதுச் சான்றிதழ், குடும்ப அட்டை, வயதுச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வித்தகுதி சான்றிதழ் (குறைந்த பட்சம் 8-வது தேர்ச்சி/தோல்வி) வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், IFSC & MICR Code விவரங்கள் அடங்கிய வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (2வது தளம்) விருதுநகர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply