ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறிய சிந்து!
பின்லாந்தில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில், ஜப்பானின் ரிகோவை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 49 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
0
Leave a Reply