25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


அருள்மிகு ஸ்ரீஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோவில்  நவராத்திரி உற்சவம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு ஸ்ரீஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் நவராத்திரி உற்சவம்.

நிகழும் மங்களகரமான பராபவ வருடம் புரட்டாசி மாதம் 24-ம் தேதி (11-10-2026) ஞாயிற்றுக்கிழமை முதல் ஐப்பசி மாதம் 03-ம் தேதி (20-10-2026) செவ்வாய்க்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. சர்வ சமுத்ர அக்ரஹாரம், இராஜபாளையம்.

நாள்

11.10.2026 ஞாயிற்றுக்கிழமை - பிராஹ்மீ

12.10.2026  திங்கள்கிழமை -மாஹேஸ்வரீ

13.10.2026 செவ்வாய்க்கிழமை -கௌமாரீ

14.10.2026 புதன்கிழமை - வைஷ்ணவீ

15.10.2026  வியாழக்கிழமை - ஐந்த்ரீ

16.10.2026 வெள்ளிக்கிழமை - புவனேஸ்வரீ

17.10.2026 சனிக்கிழமை -கோவிந்த ரூபிணீ

18.10.2026 (துர்க்காஷ்டமி)

ஞாயிற்றுக்கிழமை - ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரீ

19.10.2026 (சரஸ்வதீ பூஜை)

திங்கள்கிழமை - ஸ்ரீ மஹாஸரஸ்வதீ

20.10.2026 (விஜயதசமி)

செவ்வாய்க்கிழமை -மாலை 6 மணிக்கு காலபைரவர் அபிஷேகம்

-------- 

அக்ஷராப்யாஸம்

"ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணீ! வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே ஸதா"!!

நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஐப்பசி மாதம் 03-ம் தேதி (20-10-2026) விஜயதசமி நன்னாளாகிய செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் நமது திருக்கோவிலில் அமைந்துள்ள அம்பாள் சந்நிதிக்கு முன்பாக அக்ஷராப்யாஸம் சிறப்பாக நடைபெற உள்ளது.

அக்ஷராப்யாஸம் செய்து கொள்ளக்கூடிய குழந்தைகள் தாம்பாளம், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, உதிரிபுஷ்பம், சரம், பச்சரிசி மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றுடன் காலை 6.00 மணிக்குள் கொண்டு வந்து அம்பாளின் அருள் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு "குருபக்தமணி"

பி.ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News