25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில்.ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி உற்சவம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில்.ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி உற்சவம்

(ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் இராஜபாளையம் கிளை)

ஸ்ரீ வித்யாதீர்த்தபுரம், தெற்கு வெங்காநல்லூர் சாலை, இராஜபாளையம்.

(11.10.2026- 20.10.2026) 

நமது நூதன திருக்கோவிலில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆகியோர்களின் பரிபூர்ண அனுக்ரஹத்துடன்

10.10.2026 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் ஸ்ரீசாரதாம்பாள் மஹா அபிஷேகம், ஜெகத்ப்ரஸுதிகா அலங்காரம். 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை முதல் 20.10.2026 செவ்வாய்க்கிழமை வரை

ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி உற்சவம் 

கீழ்க்கண்டவாறு தினசரி நடைபெற உள்ளன. 

காலை 6.00 9.00 மணி

நித்ய பூஜைகள் ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசாரியர் பூஜைகள்) (ஸ்ரீராஜகணபதி,ஸ்ரீ நவாவரண,

காலை 9.00 - 12.00  வரை 

ஸ்ரீ தேவீமஹாத்ம்ய பாராயணம் 

காலை 5.00 - 7.00  வரை  

நித்ய பூஜைகள் (அஷ்டோத்ர, த்ரிசதீ, ஸஹஸ்ரநாம பாராயணங்கள்)

இரவு 7 மணி  ரதோற்சவம் 

..... 

19.10.2026 திங்கள்கிழமை காலை திருக்கோவிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள யாகசாலையில் மஹாகணபதி ஹோமமும், மஹாசண்டி ஹோமமும், சுமங்கலி, கன்யா பூஜைகளும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி ஒருநாள் பூஜைக்கு ரூ.3000/.

நவராத்ரி பூஜைக்கு கட்டளைதாரராக விரும்பும் ஆஸ்தீக மஹாஜனங்கள் திருக்கோவில் அர்ச்சகர் அல்லது 9003273690 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும். 

...... 

11.10.2026 ஞாயிற்றுக்கிழமை - ஹம்ஸ வாகனம் 

12.10.2026 திங்கள்கிழமை - காமதேனு வாகனம்

13.10.2026 செவ்வாய்க்கிழமை - ரிஷப வாகனம் 

14.10.2026 புதன்கிழமை - மயூர வாகனம் 

15.10.2026 வியாழக்கிழமை -கருட வாகனம்

16.10.2026 வெள்ளிக்கிழமை - கஜ வாகனம் 

17.10.2026 சனிக்கிழமை -வீணா சாரதா அலங்காரம்

18.10.2026 ஞாயிற்றுக்கிழமை - (துர்க்காஷ்டமி) - ஸிம்ஹ வாகனம்

19.10.2026 திங்கள்கிழமை (சரஸ்வதீ பூஜை) -  கஜலக்ஷ்மீ 

20.10.2026 செவ்வாய்க்கிழமை (விஜயதசமி) - கஜலக்ஷ்மீ 

....... 

அக்ஷராப்யாஸம்.

'ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணீ! வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே ஸதா"!!

நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஐப்பசி மாதம் 03-ம் தேதி (20-10-2026) விஜயதசமி நன்னாளாகிய செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் நமது திருக்கோவிலில் அமைந்துள்ள சாரதாம்பாள் சந்நிதிக்கு முன்பாக அக்ஷராப்யாஸம் சிறப்பாக நடைபெற உள்ளது.

அக்ஷராப்யாஸம் செய்து கொள்ளக்கூடிய குழந்தைகள் தாம்பாளம், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, உதிரிபுஷ்பம், சரம், பச்சரிசி மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றுடன் காலை 6.00 மணிக்குள் கொண்டு வந்து ஸ்ரீ சாரதாம்பாளின் அருள் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த சரண் நவராத்ரி பூஜைகளில் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சாரதாம்பாளின் திருவருளுக்கு பாத்திரராகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு "குருபக்தமணி"

பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News