இந்தியா, வங்கதேசம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அஷ்வின், ஆகாஷ் தீப் அபார ஆட்டம்.
இந்தியா வந்துள்ள வங்ககேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது கடைசி டெஸ்ட் உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நேற்று துவங்கியது.
முதல் நாள் இரவு பெய்த மழை காரணமாக, போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் துவங்கியது. வங்கதேச அணிக்கு ஷாத்மன், ஜாகிர் ஹசன் ஜோடி துவக்கம் தந்தது. ஆகாஷ் தீப் வேகத்தில் ,ஜாகிர் ஹசன் வெளியேறினார். மீண்டும் மிரட்டிய ஆகாஷ் இம்முறை ஷாத்மனை அவுட்டாக்கினார். வங்கதேச அணி 29/2 ரன் என திணறியது.
இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 அஷ்வின் 1 விக்கெட் சாய்த்தனர். ஆசிய மண்ணில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் கும்ளேவை (419) முந்தி, இரண்டாவது இடம் பிடித்தார். இந்தியாவின் அஷ்வின் 420 விக்கெட்.
கான்பூரில் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடியுடன் கூடிய மழை வர 98 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் இரண்டாவது நாள் முழுவதும் போட்டி நடப்பது. சந்தேகம்.
0
Leave a Reply