சென்னை டெஸ்டில் ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2024 2025 புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 71.67 வெற்றி சதவீதம் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியா 62.50 % நியுசிலாந்து 50.00% அணிகள் உள்ளன. வங்கதேச அணி 39.239% 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஒரே மைதானத்தில் (சென்னை சேப்பாக்கம் )இரு முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சதம் அடித்த உலகின் முதல் வீரர் என சாதனை படைத்தார் அஷ்வின். இங்கு வங்கதேசம். ( 6 விக்கெட் 113 ரன் 2024.) இங்கிலாந்துக்கு எதிராக (5 விக்கெட் 106 ரன் 2021) சாதித்தார்.
அஷ்வின் ஒரே டெஸ்டில் சதம் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்துவது நான்காவது முறை.( வெஸ்ட் இன்டிஸ்க்கு எதிராக 2 இங்கிலாந்து, வங்கத்துடன் தலா ஒரு முறை), இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் போத்தம்( 5 முறை) உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அஷ்வின். (11 முறை 36 போட்டி )இவர் ஆஸ்திரேலியாவின் லியானை (10 முறை 43 )போட்டி முந்தினார்.
சென்னை போட்டியில் தனது 92 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இந்தியா முதல் முறையாக அதிக வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply