ஆசிய கோப்பை ஹாக்கி: சாதித்த இந்திய அணிகளுக்கு டெல்லியில் பாராட்டு!
ஜப்பானில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் அணிக்கும், வெண்கலப்பதக்கம் வென்ற பெண்கள் அணிக்கும் டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டு, வீரர்களைப் பாராட்டினார். மேலும், ஊக்கத் தொகையாக ஆண்கள் அணிக்கு ₹61.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ₹21 லட்சமும் வழங்கி கௌரவித்தார்.
0
Leave a Reply