ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவை 11-1 என வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.
சீனாவின் மொகி நகரில், 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.
‘எலைட்’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை வீழ்த்தியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள், கோல் மழை பொழிந்தனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply