25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


ஆசிய விளையாட்டு: பல்வேறு போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய விளையாட்டு: பல்வேறு போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள்.

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-வது சீசன் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கிச் சுடுதல்

துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கமல்ஜீத், சுருச்சி ஆகியோர் பங்கேற்றனர். தகுதிச்சுற்றில் இந்திய ஜோடி 587 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.இறுதிச்சுற்றிலும் அசத்திய இந்திய ஜோடி, 484.6 புள்ளிகளுடன் ஆசிய சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் நிராஜ் குமார், ருத்ரான்க்ஸ், ஐஸ்வரி பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர். மூவரும் இணைந்து 1,762 புள்ளிகள் பெற, இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியது.ஆசிய விளையாட்டுத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்த முறை இந்தியா ஒரு தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை கைப்பற்றியது.

போல் வால்ட்

பெண்களுக்கான போல் வால்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சிந்து ஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.பரணிகா தொடக்கத்தில் 3.85 மீட்டர் உயரத்தைத் தாண்டினார். தொடர்ந்து 4.00 மீட்டர் உயரத்தையும் கடந்தார். அடுத்து 4.15 மீட்டர் உயரத்தை இரண்டாவது முயற்சியில் வெற்றிகரமாகத் தாண்டினார்.தொடர்ந்து 4.25 மீட்டர் உயரத்தை மூன்று முறை முயற்சித்தும், பரணிகா மற்றும் போலினா ஆகிய இருவராலும் தாண்ட முடியவில்லை.இதையடுத்து வெண்கலப் பதக்கத்தை முடிவு செய்ய ‘டை பிரேக்கர்’ நடத்தப்பட இருந்தது. ஆனால் இருவரும் வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்து கொள்ள சம்மதித்ததால், ‘டை பிரேக்கர்’ நடத்தப்படவில்லை.

ஸ்குவாஷ்

ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஜோடி 2-0 (11-3, 11-5) என்ற கணக்கில் பிலிப்பைன்ஸின் பெலினோ டேவிட், அரிபடோ ஜெமிகா ஜோடியை வீழ்த்தியது.பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (11-2, 11-5, 11-3) என்ற கணக்கில் சக வீராங்கனையான தன்வி கன்னாவை வீழ்த்தினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அபய் சிங் 3-0 (11-4, 11-3, 11-6) என்ற கணக்கில் ஜப்பானின் யுனோசுகேவை வீழ்த்தினார்.

கபடி

ஆண்களுக்கான கபடி அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 66-28என்றபுள்ளிக்கணக்கில்வெற்றிபெற்று,ஆசியவிளையாட்டில்9வதுமுறையாகஇறுதிப்போட்டிக்குமுன்னேறியது.பெண்களுக்கான கபடி அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. இந்திய அணி 48-24 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா ஜோடி, சுகின் வாங், இங்ஷா ஜோடியை எதிர்கொண்டது.முதல் இரு செட்களை 8-11, 5-11 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 8-11 என நழுவவிட்டது. நான்காவது செட்டிலும் 2-11 என ஏமாற்றமளித்தது.முடிவில் இந்திய ஜோடி 0-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News