ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இன்று தொடக்கம்; சிந்து சாதிப்பாரா?
சுமார் ₹4.50 கோடி பரிசுத் தொகைக்கான ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் பெரு நாட்டின் இனெஸ்லூசியா காஸ்டிலோவை எதிர்கொள்கிறார். இந்த முறை சிந்துவுக்கான போட்டி அட்டவணை எளிதாகவே அமைந்துள்ளது. அவர் அரையிறுதிக்கு முன்னேறினால், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியைச் சந்திக்க நேரிடும்.
2024 சையத் மோடி சர்வதேச போட்டிக்குப் பிறகு சிந்து எந்தவொரு பட்டமும் வெல்லாமல் தடுமாறி வருகிறார். இந்த நீண்ட நாள் ஏமாற்றத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவருடன் தன்வி சர்மா, மாள்விகா பான்சோத், ஆயுஷ் ஷெட்டி, எச்.எஸ். பிரணாய் உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளும் இத்தொடரில் களம் காண்கின்றனர்.
0
Leave a Reply