அவல் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்-
1கப் அவல்,1கப் கலர் குடை மிளகாய்,1/2 கேரட் ,3 பீன்ஸ்,சிறிதளவுகோஸ்,
சிறிதளவு வெங்காயத் தாள்,1/2ஸ்பூன்மிளகு தூள்,தேவையான அளவு உப்பு,
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
செய்முறை-
தடிமனான அவலை எடுத்து தண்ணீரில் அலசி வடிகட்டி 10 நிமிடம் ஓரமாக வைக்கவும்..
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்கறிகளை சேர்த்து மிதமான சூட்டில் அரை பதம் வேக வைக்கவும்.. அதிகமாக வெந்தால்
நன்றாக இருக்காது..
காய்கறி வதங்கியதும் அதனுடன் நாம் ஊறவைத்த அவலையும் சேர்த்து அத்துடன் மிளகு உப்பு சேர்த்து கலந்து விடவும்..
எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் இறுதியாக சிறிது வெங்காயத் தாளையும் சேர்த்து கலந்து விடவும்..
இப்போது சூடான சுவையான சத்தான குழந்தைகளுக்கு பிடித்த அவல் ஃப்ரைட் ரைஸ் தயார்..
. இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸ்.
0
Leave a Reply