வயிற்றுப்புண்களை ஆற்றும் பண்பு கொண்ட அவல்..
அவல்பண்டிகைகளின் போது' பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள். எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த அவலை' தினமும் சாப்பிடலாம். அவல், நெல்லை ஊறவைத்து இடித்து ,அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிவப்பு அவலில் சற்று அதிக சத்துக்கள் உள்ளன.
பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த அவலை காலை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் தேவையான சத்துக்கள் கிடைக்கும். காலையில் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. தொடர்ந்து அவல் சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை தீர்த்து, குடல் ரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும், இதிலுள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்கவும் உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு அவல் சிறந்த தேர்வாகும். இது வயிற்றுப்புண் மற்றும் அல்சர் இரண்டையும் நீக்குகிறது.
இரத்த சோகை/ அனீமியா பிரச்சனை உள்ளவர்கள் இந்த சிவப்பு அவலை அடிக்கடி சாப்பிடலாம். கர்ப்பிணிகள் தாராளமாக உணவில் அவல் எடுத்துக்கொள்ளலாம்.
பாலில் அவல் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். அவல் உப்புமா செய்தும் சாப்பிடலாம். அவலை வேக வைத்து தாளித்தும் சாப்பிடலாம். சிவப்பு அவலை பாலில் லேசாக ஊறவைத்து, தேங்காய்த்துருவல், ஏலத்தூள், நாட்டுச்சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.
0
Leave a Reply