‘Avengers: Endgame’ மீண்டும் திரைக்கு வருகிறது!
2019-ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘Avengers: Endgame’திரைப்படம் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது.
ரூசோ சகோதரர்கள் இயக்கிய இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
தற்போது சில புதிய காட்சிகள் இணைக்கப்பட்டு ‘Avengers: Endgame – Encore’ என்ற பெயரில் செப்டம்பர் 25-ம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது.
மேலும் டிசம்பர் 18-ல் வெளியாகவுள்ள புதிய ‘Avengers: Doomsday’படத்துடன் தொடர்புடைய சில அம்சங்கள் இந்த புதிய பதிப்பில் இடம்பெறுவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
0
Leave a Reply