விழிப்புணர்வு பயிற்சி முகாம்
ராஜபாளையத்தில் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் மின் சிக்கனம், மின் திறன், பாது காப்பு குறித்து விவசாயி களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. உதவி செயற் பொறியாளர் செண்பக மூர்த்தி, வைத்தியநாதன் மின் மேலாண்மை, சூரிய மின்சாரம், மின் சிக்கனம், பாதுகாப்பு, விழிப் புணர்வு, மின் மோட்டார் பராமரிப்பு, சோலார் மின் திட்ட மானியங்கள், மானியம் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டங்கள், காப்பீடு செய்யும் முறை, கால அவகாசம், அரசு மானியம், தகுதி, கால்நடை பராமரிப்பு குறித்துகாணொளி காட்சிகள் மூலம் ராஜபாளையம் வேளாண் உதவி இயக்குனர் திருமலைச்சாமி விளக்கம் அளித்தனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்
0
Leave a Reply