வாழைத்தண்டு சட்னி
தேவையானப்பொருட்கள்: வாழைத்தண்டு –சிறியது, உளுத்தம் பருப்பு- 2 ஸ்பூன், மிளகாய் வற்றல்- 2, பூண்டு- 5 பல், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு வாழைத்தண்டை நார் இல்லாமல் நறுக்கி லேசாக எண்ணெய்யில் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு மிளகாய் வற்றலை எண்ணெய்யில் வறுத்து அதனுடன் வதக்கிய வாழைத்தண்டு ,தேவைக்கேற்ப உப்பு, ஐந்து பூண்டு பல் சேர்த்து சட்னியாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
0
Leave a Reply