மூல நோய்க்கு அசோக மரத்தின் பட்டைகள் சிறந்த மருந்தாகும்
தென்னை, வாழை, வேப்பமரம், முருங்கை மரங்களை போலவே, அசோக மரம் இயற்கையின் வரப்பிரசாதம்இந்த மரத்தின் இலைகள், பட்டைகள், பூக்கள் என அத்தனையுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. இதன் இலைகள், வயிற்றிலுள்ள புழு, பூச்சிகளை நீக்கி குடலை சுத்தம் செய்கின்றன.வயிறு உபாதைகளையும் இந்த இலைகள் சரிசெய்யக்கூடியவை. இதன் இலைகளை இடித்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். சிறிது தண்ணீரில் இந்த சாறு கலந்து, சீரகத்தூள் சேர்த்து குடித்தால், வயிறு பொருமல், வயிறு வலி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், வயிற்றுப்புண்கள் எல்லாமே நீங்கிவிடும்.அசோக மரத்தின் இலைகளை சரும ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவார்கள். இந்த இலைகளை பறித்து நன்றாக கழுவி, தண்ணீரில் கொதிக்கவிட்டு எடுத்து கொள்ள வேண்டும். இதில் கடுகு எண்ணெய்யை கலந்து, உடலிலுள்ள காயங்கள், புண்கள், கொப்புளங்களுக்கு தடவினால் விரைவில் குணமாகும். எரிச்சலும் தணியும்.
இம்மரத்தின் பட்டைகளையும் சரும ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துவார்கள். இந்த பட்டையை, சிறிது நீரில் இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, காலையில் பட்டையை விழுதுபோல் அரைத்து, சருமத்திற்கு பூசிவந்தால், சருமம் ஜொலி ஜொலிக்கும். தோலில் உள்ள அலர்ஜிகள் நீங்கி, பொலிவுபெறும். கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான காஸ்மெடிக்ஸ் எனப்படும் அழகு சாதன பொருட்களில், முக்கியமான மூலப்பொருட்களாக இந்த மரத்தின் பட்டைகளை சேர்க்கிறார்கள். அசோக மரத்தின் விதைகளை பொறுத்தவரை, சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையை கொண்டது. சிறுநீரகத்தில் கற்கள் சேராமலும் முன்கூட்டியே தடுக்கிறது. இந்த விதையை காயவைத்து தூள் செய்தும் மருந்தாக பயன்படுத்துவார்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கும் அசோக மரத்து பூக்கள் நன்மைகளை தருகின்றன. இந்த பூக்களை காயவைத்து தூள் செய்து, நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். மூலநோய்க்கு பெரிதும் உதவுகிறது. இந்த பட்டைகள். வெறுமனே மர பட்டைகளை டீ போல போட்டு குடிப்பதால் மூலநோய் தீவிரம் குறையும்.மூட்டுவலிகளுக்கும் இந்த மரப்பட்டையை பேஸ்ட் போல அரைத்து பூசினால் நிவாரணம் கிடைக்கும். இதன் பூக்களை இடித்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தாலும் ரத்த மூலத்துக்கு சிறந்த தீர்வை தரும். இந்த மரத்தின் பட்டையில் கெட்டோஸ்டெரால் என்ற பொருள் உள்ளதால், ஒழுங்கற்ற மாதவிடாய்களை சரிசெய்கிறது.
அதிகப்படியான ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கை தடுக்க இதன் பூக்கள் பயன்படுகின்றன. இதனால் வயிற்று வலியையும் தீர்க்கிறது. பெண்களை பாதிக்கக்கூடிய கருப்பை கட்டிகளை இந்த மரத்தின் பட்டைகள் சரிசெய்கின்றன. அதாவது, இந்த மரப்பட்டை பொடி 5 கிராம் எடுத்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து, பாதியாக சுண்டவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் 2 வேளை, 2 மாதம் சாப்பிட்டு வந்தாலே, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.
0
Leave a Reply