பாஸ்மதி அரிசி உலகின் சிறந்த அரிசியாக தேர்வு
இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாஸ்மதி அரிசி ரகங்கள் பயிரிடப்படுகிறது.2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியைப் பிரபல உணவு வழிகாட்டி வழிகாட்டி நிறுவனமான அட்லஸ் அறிவித்துள்ளது. சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில், 11ஆவது இடம் அளித்திருந்தது.நீளமான தனித்துவமான சுவை வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி, இந்தியத் துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுக்கலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply