25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பீர்க்கங்காய் சட்னி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பீர்க்கங்காய் சட்னி

தேவையானப்பொருட்கள்:
பீர்க்கங்காய் –1/4கிலோ( தோலை மேலோட்டமாக சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்)

காயந்த மிளகாய் – 3 நம்பர்,உளுந்தம் பருப்பு – 1/2 கை அளவு,சின்ன வெங்காயம் – 1கப்,

தக்காளி – 3,கொத்தமல்லி தழை – 1/4கப்,கறிவேப்பிலை – 1/4கப்,நல்லெண்ணெய் – தாளிப்பதற்கு ஏற்ப,

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வாணலியில்1தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்தெடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.மறுபடியும் வாணலியில் எண்ணெய் ஊற்றி பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து சிறு நேரம் வதக்கவும்.பின்பு அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சுருங்கி வரும் வரை வதக்கவும்.வதக்கியவுடன் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.

மிக்ஸியில் சிவக்க வறுத்தெடுத்த உளுந்தம் பருப்பு கலவையும், ஆற வைத்த பீர்க்கங்காய் கலவையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.இக்கலவை ஆட்டுகல்லிலும் அரைக்கலாம். மிக்ஸியை விட இது மிகவும் சுவையாக இருக்கும்.சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.

இச்சட்னி மிகவும் சுவையாக இருக்கும். பீர்க்கங்காய் பிடிக்காதவர்கள் கூட இதை செய்து வைத்தால் சாப்பிடுவார்கள். பீர்க்கங்காய்க்கு பதிலாக காரட், பீட்ரூட், புடலங்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News