பீட்ரூட் அல்வா
தேவையான பொருட்கள் : துருவிய பீட்ரூட் - 2 கப் கொதிக்கவைத்த பால் - 1 கப் சர்க்கரை - 1/2 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் ,ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன். பாதாம், முந்திரி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன்நெய் ஊற்றிகாய்ந்ததும், துருவிவைத்துள்ள பீட்ரூட்டைசேர்த்து 3,5 நிமிடம் குறைவான தீயில்பச்சை வாசனைபோக வதக்கிவிட வேண்டும்.பின்னர் அதில்பால் சேர்த்து10 நிமிடம் குறைவானதீயில் மென்மையாகும்வரை வேகவைக்கவும். பின்பால் வற்றும்வரை அடுப்பில்வைத்து, பின்அதில் சர்க்கரைசேர்த்து நன்குகிளறி விடவேண்டும்.
அப்படி கிளறிவிடும் போது,கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போதுகொஞ்சம் கொஞ்சமாகநெய் சேர்த்துகிளறி அல்வாபதத்திற்கு வரும்வரை கிளறிவிட வேண்டும். பின் ஏலக்காய்பொடி சேர்த்துகிளறவும்.அதே சமயம்மற்றொரு அடுப்பில், சிறு வாணலியைவைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும்பாதாம் சேர்த்துபொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்துபிரட்டினால், சுவையானபீட்ரூட் அல்வாரெடி.
0
Leave a Reply