பீட்ரூட் கார பணியாரம்!
தேவையான பொருட்கள்:
துருவிய பீட்ரூட்1 கப்,பெரிய வெங்காயம் 1,வேர்கடலை பருப்பு-25 கிராம்,இட்லி மாவு1 கப்,சீரகம், எண்ணெய், உப்பு தேவையான அளவு,கருவேப்பிலை,மல்லித்தழை, பச்சை மிளகாய்- சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் சூடானதும், சீரகம், துருவிய பீட்ரூட், நறுக்கிய மல்லி தழை, வெங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாய், வேர்க்கடலை பருப்பு, உப்பு போட்டு வதக்கவும். இவற்றை இட்லி மாவில் நன்றாக கலக்கவும். பணியார சட்டி சூடானதும், மாவு கலவையை ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும்சத்து மிக்க'பீட்ரூட் பணியாரம்!' தயார்.
0
Leave a Reply