பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்
தேவையான பொருட்கள்
2 கப் தோசை மாவு,பீட்ரூட் துருவியது,ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,ஒரு தக்காளி நறுக்கியது,சிறிதளவு மல்லித்தழை, சிறிதளவு கருவேப்பிலை,சிறிதளவு புதினா தழை, இட்லி பொடி, தேவையான அளவு எண்ணெய்.
செய்முறை
ஒரு பீட்ரூட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கருவேப்பிலை, மல்லித்தழை, புதினா இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் இட்லி பொடியை எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை காய வைக்க வேண்டும். காய்ந்ததும் ஒரு கரண்டி தோசை மாவை எடுத்து சிறியதாக ஊற்ற வேண்டும். அதன்மேல் பீட்ரூட் துருவல், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சிறிது மல்லித்தழை போட வேண்டும்.
அதன்மேல் முழுசும் இட்லி பொடியை தூவ வேண்டும்.தோசையை சுற்றிலும் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
தோசை வெந்ததும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.
இப்பொழுது மிகவும் சுவையான பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம் ரெடி.
0
Leave a Reply