எலுமிச்சை ,தேங்காய் ,புளி ,தக்காளி சாத வகைகள் செய்யும் முன் .....
பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது பச்சையாக உணவில் சேரத்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.
ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
வாழைக்காய் மற்றும்வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென பால் ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொறு மொறுவென இருக்கும்.
எலுமிச்சை,தேங்காய்,புளி,தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
0
Leave a Reply