பெலாரசின் சபலென்கா, பிரிட்டனின் ரடுகானு, ஸ்பெயினின் அல்காரஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்மெல்போர்னில், பெண்கள் ஒற் றையர் பிரிவு முதல் சுற்றில், பெலாரசின் அரினா சபலென்கா, பிரான்சின் டியான்ட்சோவா மோதினர். உலகின் 'நம்பர்-1' சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-4, 6-1 என தாய் லாந்தின் மனஞ்சயா சவாங்காயேவை
மற்றொரு முதல் சுற்றில்வெற்றி பெற்றார். உக்ரைனின் எலினா ஸ்வி டோலினா 6-4, 6-1 என ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை தோற்கடித்தார்.
ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன்ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் அல்காரஸ் 6-3, 7-6, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply