வெங்காயத்தோல்களின்நன்மைகள்.
..அனைவரது வீட்டு சமையலிலும் தவறாமல் தினசரி பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் பொருளாக வெங்காயம் இருக்கிறது. வெங்காயத்தை உரிக்கும் போது பலரின் கண்களில் நீர் வடிகிறது. என்றாலும் வெங்காயத்தை போலவே பலரும் தூக்கி எறியும் அதன் தோல்களிலும் நன்மைகள் இருப்பது தெரிந்தால் ஒருவேளை அவர்கள் வெங்காயம் உரிப்பதை வெறுக்காமல் இருக்கலாம்.வெங்காயத் தோல்கள் நல்ல ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை அளிக்கும் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் .நம்மில் பலரால் அதிகம் கண்டுகொள்ளப்படாத வெங்காய தோல்கள் உண்மையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே வெங்காயத் தோல்கள் நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. வெங்காய தோலானது ஃபிளாவனாய்ட்கள் குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்ட்டானQuercetinஐ கொண்டிருக்கின்றன. இது அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது.
தவிர வெங்காயத் தோல்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வைட்டமின்ஸ்& மினரல்ஸ் நிறைந்துள்ளன. இவை நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, பார்வை ஆரோக்கியத்திற்கும், எலும்புகளை வலிமையாக வைப்பதற்கும் மற்றும் எலக்ட்ரோலைட் பேலன்ஸிற்கும் பங்களிக்கின்றன. . வெங்காயத் தோல்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை நடுநிலையாக்க உதவி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்-ஐ குறைக்கின்றன. இதய நோய் மற்றும் கேனர் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன. வெங்காய தோல்களில் காணப்படும் Quercetin உள்ளிட்ட கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. அந்த வகையில் வெங்காயத்தோல் சாறு அல்லது இன்ஃப்யூஷன்ஸ் எடுத்து கொள்வது ஆர்த்ரைட்டிஸ் மற்றும் இன்ஃப்ளமேட்ரி பவுல் (inflammatory bowel) டிசீஸ் போன்ற நிலைகளில் அழற்சியை குறைக்க உதவும்.
வெங்காய தோல்களில் டயட்ரி ஃபைபர் உள்ளது, இது குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பதோடு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.வெங்காய தோல்களில் காணப்படும் ஃபிளாவனாய்ட்ஸ்களானதி ப்ரீபயாடிக் விளைவுகளை ஏற்படுத்த கூடும், இதன் விளைவாக நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப்படும். வெங்காய தோலை டீ-யாக காய்ச்சி , டயட்டில் சேர்த்து கொள்ளலாம்
0
Leave a Reply