சுரைக்காயின் நன்மைகள்
சுரைக்காயில் நீர் சத்துக்கள் அதிகம் , உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது சுரைக்காய்வெப்பமண்டலதாவரம் .இதனை பயிர்செய்வதுமிகவும் எளிதானது. இதன் தாயகம் தென்னாப்பிரிக்கா. ஆனால் இந்தசுரைக்காய் தென்னாப்பிரிக்காவை அடுத்து இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியநாடுகளிலும் அதிகமாக உற்பத்திசெய்கின்றன. சுரைக்காய் பயிர் செய்த 15 நாட்களில் வளர்ச்சி அடைய துடங்கிவிடும். அதன் பிறகு 40 அல்லது 45வது நாட்களில் காய் காய்த்து60 நாட்களில் நீங்கள் கொடியில்இருந்து அதனை பரித்துவிடலாம். இது பச்சை நிறத்தில் 2 அடி நீளமும் 3 அடி அகலத்திலும் இருக்கும்.
வைட்டமின்A,வைட்டமின் B1,வைட்டமின் B6,போலேட் ,பாஸ்பரஸ் ,மெக்னீசியம் ,இரும்புசத்து,கால்சியம் ,துத்தநாகம்,நார்ச்சத்து ,கொழுப்புச்சத்து,கார்போஹட்ரேட் ,புரோட்டீன்சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து நமது உடலில் செரிமான கோளாறு வராமல் சாப்பிட உணவு உடனே செரிமானம் ஆகுவதற்கு நன்மை அளிக்கிறது.இது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் பயன்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் வராமல் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
சுரைக்காயில் 96 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது. ஆகையால் உடல் சூட்டிற்கு ஒரு சிறந்தமருந்தாக சுரைக்காய் பயன்படுகிறது. எனவே உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் ஏதோ ஒருவகையில் சுரைக்காயை சாப்பிட்டால் எடுத்து கொள்வது நல்லது. சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக சுரைக்காய் சாப்பிட்டால் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையே வராது. பித்தம் அதிகமாக உள்ளவர்கள் மதிய உணவின்போது சுரைக்காயை ஏதோஒரு வகையில் சமைத்துசாப்பிட்டால் பித்தம் சமநிலைஅடைந்து விடும்.இத்தகைய சுரைக்காய் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை போக்குவதற்கும் மற்றும் மூல நோய்க்கும் சிறந்த பலனை தருகிறது.
0
Leave a Reply