பிரெட் ஊத்தாப்பம்
தேவையான பொருட்கள்
2கப் ரவை , 2கப்அரிசிமாவு, 1/2கப் தயிர் , தேவையான அளவு உப்பு,1 வெங்காயம்,2 கேரட்,
2 பச்சை மிளகாய்,10பீஸ் பிரெட்,தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு ரவை தயிர் உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் பிரெட் போட்டு தூள் செய்து கொள்ளவும். பிரெட் தூளில் கலந்து வைத்த மாவை ஊற்றி கலக்கவும்.
பின் அதில் வெங்காயம் துருவிய கேரட் பச்சை மிளகாய் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
தோசை கல்லில் மாவை ஊற்றி ஊத்தாப்பம் போல் ஊற்றி எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
0
Leave a Reply