ப்ரோகோலி மசியல்.
தேவையான பொருட்கள்:
ப்ரோகோலி -வெங்காயம் -1, இஞ்சி-பூண்டு விழுது -1/4 கரண்டி, மிளகாய் வற்றல் - 2, மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 1, உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
ப்ரோகோலியை சுடுநீரில் நன்றாக கழுவி, மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடான சூடானதும். கடுகு, கறிவேப்பில்லை, மிளகாய் வற்றல், இஞ்சிபூண்டு விழுது மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து தாளிக்கவும்
அரைத்த ப்ரோகோலியை அதனுடன் சேர்த்து5-7 நிமிடங்கள் மட்டும் வதக்கினால் போதும். அதிக நேரம் கொதிக்கவைத்தால் சுவை மாறிவிடும். சுவையான ப்ரோகோலி மசியல் ரெடி.
இந்த மென்மையான சுவையுள்ள ப்ரோகோலி மசியல், புல்கா,பரோட்டா அல்லது புளிப்பு உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply