புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி.
தேவையான பொருட்கள் -
1 புடலங்காய்,
1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,
ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,
1/4 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் ,
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் பொரிப்பதற்கு.
செய்முறை -
புடலங்காயை கழுவி வைத்துக்கொள்ளவும். பின்னர் காயின் ஓரங்களை வெட்டி விட்டு மையப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.அதை ரிங் ரிங் ஆக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
நறுக்கும் போது உதிரும் சதைப்பகுதியை விட்டுவிட்டு மற்ற புடலங்காய் ரிங்ஸ்களை எடுத்து வைக்கவும்.
ஒரு பௌலில் அரிசிமாவு, கடலை மாவு, காஷ்மீர் +மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள், உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். அதில் நறுக்கிய ரிங்ஸ்சை சேர்த்து பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயாராக வைத்துள்ள ரிங்ஸ்சை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது மிகவும் சுவையான ஒரு வித்தியாசமான புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி தயார். இந்த சுவையான புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜியை அனைவரும் ஈவ்னிங் பைட்ஸ் ஆக செய்து சுவைக்கவும்.
0
Leave a Reply