கற்றாழை பூ
கற்றாழை மிக சிறந்த மூலிக மகத்துவம் நிறைந்த செடி ஆகும். இதில் பூக்கும் பூக்களுக்கும் அதே மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கின்றன.
கற்றாழை பூ உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் உடற்சூட்டின் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல், நீர்க்கடுப்பு ஆகிய பிரச்சனைகளை தீர்க்க இதன் பூ உதவி புரிகிறது. இந்த பூவை காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான போது சிறிது நீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் அறவே நின்று விடும்.
இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிவிடுகிறது. கற்றாழை பூ உடலை சோர்வு அடையாமல் சுறுசுறுப்பாக வைக்கிறது என்றும் பல ஆய்வுகள் கூறுகின்றன.
கற்றாழை பூ உடலில் உள்ள நச்சுக்களை மட்டும் அல்ல, காற்றில் உள்ள நச்சுக்களையும் நீக்கும் தன்மை கொண்டது. இது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து ,நம்மை காற்றின் மூலம் பரவும் பல தொற்றுக்களில் இருந்து காக்கிறது.
கற்றாழை பூவில் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மை உள்ளது. இதனால் இது வயிற்றில் ஏற்படும் அல்சர் எனப்படும் புண் மற்றும் கர்ப்பப்பையில் உருவாகும் புண்களை அழிக்கும் தன்மை கொண்டது வயிற்று புண் உள்ளவர்கள் பூவை அரைத்து பாலுடன் வைத்து குடிக்கலாம்.
தலையில் உண்டாகும் பொடுகு பேன், ஆகியவற்றை அடியோடு ஒழிக்கிறது. இந்த பூவை அரைத்து தலையில் தேய்த்து கொள்ள தலைமுடியும் நீண்டு வளரும்.
0
Leave a Reply