25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சாமை பாயாசம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாமை பாயாசம்

தேவையான பொருட்கள் - 100 gm சாமை ,125_150 கிராம் வெல்லம் பொடித்தது ,1/2 தம்ளர் பால், 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,1டேபிள்ஸ்பூன் நெய் ,10 முந்திரி பருப்பு ,1/2 டீஸ்பூன் ஏலக்காய் - சுக்கு பொடி

செய்முறை -  சாமையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை கழுவி விட்டு வேறு தண்ணீரில் அரை மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு மூன்று டம்ளர் அளவு தண்ணீர்விட்டு நன்கு வேகவிடவும்.15நிமிடத்தில் வெந்துவிடும். கெட்டியாக இருந்தால் தேவைப்பட்டால் பாயாசம் வைக்கும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும். 

தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சுக்கு பொடி எடுத்து வைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.ஏலக்காய் சுக்கு பொடி சேர்ப்பதால் பாயாசம் வாசமாக சுவையாக இருக்கும்.

சாமை வெந்த பிறகு வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்கவிடவும்.வெல்லம் கரைந்ததும் தேங்காய் துருவல் ஏலக்காய் சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.

சுவையான சாமை பாயசம் தயார். சிறு தானியத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் வெல்லத்தில் உள்ள இரும்பு சத்து விரத காலத்தில் நமக்கு உடல் சக்தியைக் கொடுக்கும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News