பெட்ஷீட்டுகளை வாஷிங் மிஷினில் துவைக்கலாமா ?
வெயில் காலத்தில் போர்வையில் வரும் துர்நாற்றத்தை தவிர்க்கவும் பலர் பெட்ஷீட்டை துவைக்க நினைப்பார்கள்.. குளிர் காலம் முடிந்து வெயில் காலம் நெருங்குவதால் அனைவரும் உங்கள் வீட்டில் இருக்கும் பெட்ஷீட்டை துவைத்து மடித்து வைக்கலாம் .திட்டம் போட்டிருப்பார்கள்பெட்ஷீட்டை மெஷினுக்குள் போடுவதற்கு முன்பு அதில் குறிப்பிடப்பட்ட குறிப்பை படிக்க வேண்டும். துவைக்கலாமா, ட்ரை க்ளீனிங்கா என்ன வகையான துணி எப்படி துவைக்க வேண்டும் போன்ற கவன குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து நீங்கள் பெட்ஷீட்டை துவைக்கலாம். அதை பொறுத்து நீங்கள் பெட்ஷீட்டை துவைக்கலாம்
இதையடுத்து, வாஷிங் மெஷின் என்ன அமைப்பு என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக கணமாக பெட்ஷீட் போடுவதாக இருந்தால் உங்கள் மெஷின் எடை7 கிலோ எடை கொண்டிருக்க வேண்டும். அப்படி மெஷின் என்ன அளவை தாங்கி கொள்ளும் என்பதை பொறுத்து பெட்ஷீட்டை போட வேண்டும். சாதாரண துணி லேசாக இருப்பதால் அது திரும்பி புரண்டு துவைத்து கொள்ளும். ஆனால், பெட்ஷீட் கணமாக இருப்பதால், நீங்கள் அதை2,3 முறை மேலும், கீழும் திருப்புதல் வேண்டும். இதன் மூலம் பெட்ஷீட் ஒரே இடத்திலேயே நிற்காமல் இருக்கும். இதையெல்லாம் கவனிக்காமல் இருப்பதால்வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆகிவிடும் அபாயம் உள்ளது அல்லது பெட்ஷீட் வீணாகும் அபாயமும் உள்ளது என்பதால் கவனமுடம் இருக்கவும்.
0
Leave a Reply