25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நள்ளிரவில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நள்ளிரவில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாமா?

நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து தாகத்தோடு சிலர் எழுவதுண்டு. நாவறட்சியை போக்குவதற்கு தண்ணீர் அருந்தவும் செய்வார்கள். அப்படி நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு நல்லதல்ல என்பதே மருத்துவ நிபுணர்களின் பதிலாக இருக்கிறது. 

அப்படி தாகமாக எழுந்தால் உடல் நீரிழப்புக்கு ஆளாகி இருப்பதாக அர்த்தம். தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். ஆனால் அதிகம் பருகக்கூடாது.அது தூக்கத்தை சீர்குலைத்துவிடும். மீண்டும் சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும். ஆழ்ந்த தூக்கத்தையும், நோய் எதிர்ப்பு அமைப்பையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்.

அதேவேளையில் உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும். இந்த செயல்முறைகளுக்கு தண்ணீர் மிக முக்கியமானது. அதனால் தூங்க செல்வதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். நள்ளிரவில் அடிக்கடி தாகம் எடுப்பதை தவிர்க்க பகலில் உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைப்பது அவசியம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News