கேரட் சாதம் (carrot rice)
தேவையான பொருட்கள் :
வேகவைத்த சாதம் - 1 கப்,
கேரட் - 2 (துருவியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 1/2 ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு .
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து
தாளிக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை
வதக்கவும்.
பின்பு துருவிய கேரட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கேரட் சுருங்கி வேகும் வரை
மிதமான தீயில் வதக்கவும்.
கேரட் வெந்த பிறகு வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் சாதம் தயார்.
0
Leave a Reply