காலிஃபிளவர் பொரியல்
தேவையான பொருட்கள்
காலிபிளவர் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - கால் கப்
செய்முறை
நறுக்கிய காலிபிளவரை சுத்தமான நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் உப்பு சேர்த்து, தண்ணீரில்20 நிமிடங்கள் வேகவைத்து, பிறகு தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர், வேகவைத்த காலிபிளவர், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, காலிபிளவர் மசாலாவுடன் நன்கு சேரும் வரை வதக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து, 2 நிமிடங்கள் வதக்கி இறக்கினால் சுவையான காலிபிளவர் பொரியல் தயார்.
0
Leave a Reply