சத்துமாவு புட்டு.
தேவையான பொருட்கள்
1 கப் சத்துமாவு,
4 ஸ்பூன் தேங்காய் துருவல்,
2 ஸ்பூன் சர்க்கரை,
1/2 ஸ்பூன் உப்பு,
வாழைப்பழம் தேவைக்கேற்ப,
1/4ஸ்பூன் ஏலக்காய் தூள்.
செய்முறை :
முதலில் சத்துமாவை கடாயில் சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.தேவையான அளவு உப்புசேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.கையில் பிடித்தால் கொழுக்கட்டை பதத்திற்கும் உதிர்த்து விட்டால் தூளாகும் அளவுக்கு இருக்க
வேண்டும்.இப்பொழுது இதை ஒரு இட்லி தட்டில் துணி போட்டு அதன் மேல் புட்டு மாவை சேர்த்து 5 நிமிடம்ஆவியில் வேக வைக்க வேண்டும்.5 நிமிடம் கழித்து வெந்தவுடன் இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் சர்க்கரை தேங்காய்துருவல் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்தால் புட்டு ரெடி.அப்படியே பரிமாறலாம்.அல்லது 1 ஸ்பூன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து பரிமாறலாம்.
அல்லது 1 வாழைப்பழத்தை மசித்து இதனுடன் சேர்த்து பரிமாறலாம்.குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு புட்டு தயார்.
0
Leave a Reply