சென்னை-இன்டர் காஷி அணிகள், ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று மோதல்.
12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி ,14 அணிகள் இடையிலான பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று இரவு சென்னை நேரு ஸ்டே டியத்தில் 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., அறிமுக அணியான இன்டர் காஷியைமுதல்முறையாக எதிர் கொள்கிறது.
சென்னை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. முந்தைய ஆட்டத்தில் எப்.சி.கோவாவுடன் டிரா கண்டது. இன்டர் காஷி 6 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 2 டிரா, 3 தோல்வியுடன் 5 புள்ளிகள் எடுத்துள்ளது.சென்னை அணி ஐ லீக்கில் இருந்து முன்னேறி இருக்கும் இன்டர் காஷியை வீழ்த்தி 2-வது வெற்றிக்குகுறி வைத்துள்ளது.
0
Leave a Reply