25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி.

உஸ்பெகிஸ்தானில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஓபன் பிரிவில் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியா, இத்தாலி அணியை எதிர்கொண்டது.

இந்தியாவின் குகேஷ் (கருப்பு காய்கள்), 33-வது நகர்த்தலில் இத்தாலியின் சபினோ புருனெல்லோவை (வெள்ளை காய்கள்) வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் நிஹால் சரின் (வெள்ளை காய்கள்), 40-வது நகர்த்தலில் இத்தாலி வீரர் பிரான்செஸ்கோ சோனிசை (கருப்பு காய்கள்) தோற்கடித்தார்.

இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தங்களது போட்டிகளை ‘டிரா’ செய்தனர். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.

பெண்கள் பிரிவின் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியா, கிரீஸ் அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியாவின் கொனேரு ஹம்பி (வெள்ளை காய்கள்), 46-வது நகர்த்தலில் கிரீஸ் வீராங்கனை ஸ்டாவ்ரூலாவை (கருப்பு காய்கள்) வீழ்த்தினார்.

மற்ற இந்திய வீராங்கனைகளான வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ ஆகியோரும் வெற்றி பெற்றனர். இந்தியாவின் திவ்யா தேஷ்முக் தனது போட்டியை ‘டிரா’ செய்தார். முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News