பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற செஸ் வீரர்கள், வீராங்கனைகள்.
.ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் செஸ் ஒலிம்பியாட் 45 வது சீசன் சமீபத்தில் நடந்தது. தமிழக வீரர்கள் குகேஷ் ஸ்ரீநாத், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட பலர் பங்கேற்ற இந்தத் தொடரின் 11 சுற்றுகளின் முடிவில், இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணி முதலிடம் பிடித்தது. இதன் வாயிலாக தங்கப் பதக்கஙகளை முதன்முறையாக வென்று வரலாற்ற சாதனையையும் படைத்தது இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் சாதனைப் படைத்த இந்திய அணியினரை சந்தித்து வாழ்த்து கூற பிரதமர் மோடி முடிவு செய்தார்.
திடீரென இந்த சந்திப்பு முடிவு செய்யப்பட்டது செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தி, அஜர்பைஜானில் நடந்த செஸ் தொடரில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார் இந்திய செஸ் அணியினரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானதை அறிந்த அவர், உடனே நாடு திரும்ப முடிவு செய்தார். இதையடுத்து. அஜர்பைஜான் செஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், தனக்கு பதிலாக கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் பங்கேற்பார் ,எனவும் போட்டி குழுவினரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு செஸ் பலகை ஒன்றை, இந்திய செஸ் அணியினர் வழங்கினர்.
0
Leave a Reply