கொண்டைக்கடலை மசால் ப்ரை.
தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
கடலை மாவு - 4 தேக்கரண்டி
மிளகாய் துாள், அரிசி மாவு, கரம் மசாலாத்துாள் - தலா 1 மேஜைகரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கொண்டைக் கடலையை இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். பின், கடலையில் உள்ள தண்ணீரை வடிக்கவும்.
அகலமான பாத்திரத்தில், வேக வைத்த கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், கரம்மசாலாத்துாள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக கடலையை போட்டு பொரித்து எடுக்கவும்.
புரதம், இரும்பு சத்து, நார்சத்து நிறைந்த கொண்டைக்கடலை மசால் ப்ரை தயார். குழந்தைகள் விரும்பி உண்பர்.
0
Leave a Reply