25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்கள் அக்டோபர் 22-ஆம் தேதி  முதல் அக்டோபர் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்கள் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

விருதுநகர் மாவட்ட  ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 19,412 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்காணும் அட்டவணைப்படி அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகாம் நடைபெறும் நாட்கள் விபரம்:

விருதுநகர் யூனியனில் 22ம் தேதி துலுக்கப்பட்டியிலும், 23 மற்றும் 24 -ம் தேதி ஆமத்தூரிலும், 25-ம் தேதி கடம்பன்குளத்திலும், 26ம் தேதி மெட்டுக்குண்டுலும், 27ம் தேதி சென்னல்குடியிலும்,

  அருப்புக்கோட்டை யூனியனில் 22ம் தேதி செம்பட்டியிலும், 23ம் தேதி கோபாலபுரத்திலும், 24ம் தேதி செட்டிபட்டியிலும், 25ம் தேதி வில்லிபத்திரியிலும், 26ம் தேதி T.மீனாட்சிபுரத்திலும், 27ம் தேதி திருவிருந்தாள்புரத்திலும்,

காரியாபட்டி யூனியனில் 22ம் தேதி பந்தனேந்தலிலும், 23ம் தேதி பாப்பனத்திலும், 24ம் தேதி T.வேப்பங்குளத்திலும், 25ம் தேதி T.செட்டிகுளத்திலும், 26ம் தேதி வக்கணாங்குண்டுலும், 27ம் தேதி A.தொட்டியன் குளத்திலும்,

நரிக்குடி யூனியனில் 22ம் தேதி மேலபருத்தியூரிலும், 23ம் தேதி இசலிலும், 24ம் தேதி வேலனேரியிலும், 25ம் தேதி பூமாலைப்பட்டியிலும், 26ம் தேதி பனைக்குடியிலும், 27ம் தேதி எழுவாணியிலும்,

ராஜபாளையம் யூனியனில் 22ம் தேதி சோழபுரத்திலும், 23ம் தேதி சோலைச்சேரியிலும், 24ம் தேதி முதுகுடியிலும், 25ம் தேதி நக்கனேரியிலும், 26ம் தேதி கிழவிக்குளத்திலும், 27ம் தேதி ஜமீன்கொல்லங்கொண்டானிலும்,

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் 22ம் தேதி A.ராமலிங்கபுரத்திலும், 23ம் தேதி மல்லிபுதூரிலும், 24ம் தேதி திருவண்ணாமலையிலும், 25ம் தேதி வு.மானகசேரியிலும், 26ம் தேதி பூவாணியிலும், 27ம் தேதி விழுப்பனூரிலும்,

திருச்சுழி யூனியனில், 22ம் தேதி நார்த்தம்பட்டியிலும், 23ம் தேதி பரளச்சியிலும், 24ம் தேதி மறவர்பெருங்குடிலும், 25ம் தேதி மு.செட்டிகுளத்திலும், 26ம் தேதி விடத்த குளத்திலும், 27ம் தேதி செங்குளத்திலும்,

வத்றாப் யூனியனில், 22ம் தேதி சேதுநாராயணபுரத்திலும், 23ம் தேதி நத்தம்பட்டியிலும், 24ம் தேதி இலந்தைகுளத்திலும், 25ம் தேதி தம்பிபட்டியிலும், 26ம் தேதி S கொடிக்குளத்திலும், 27ம் தேதி ஆயர்தர்மத்திலும்,

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டில், 22ம் தேதி பெரியபள்ளிவாசல் வளாகத்திலும், 23ம் தேதி பெரியபள்ளிவாசல் வளாகத்திலும், 24ம் தேதி பெரியபள்ளிவாசல் வளாகத்திலும், 25ம் தேதி TVS பாலாசங்கா வளாகத்திலும், 26ம் தேதி முத்துராமன்பட்டியிலும், 27ம் தேதி முத்துராமன்பட்டியிலும்,

அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டில், 22ம் தேதி காமராஜ் திருமணமண்டபத்திலும், 23ம் தேதி ஆயிரங்கண்மாரியம்மன் கோவில்மண்டபம் & VASS திருமண மண்டபத்திலும், 24ம் தேதி கம்மவார் மண்டபம் ரூ வேலாயுதபுரம் சமுதாயக்கூடத்திலும், 25ம் தேதி ஆசாரிமார் மண்டபம் ரூ தெற்குதெரு சவுண்டம்மன் கோவில் மண்டபத்திலும், 26ம் தேதி ராமசாமிபுரம் நகராட்சி பள்ளிகூடத்திலும், 27ம் தேதி மதுரைரோட்டில் உள்ள அல்அமின்பள்ளியிலும்,

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டில், 22ம் தேதி சிவகாமிபுரம் சாலியர் சமுதாயக்கூடத்திலும், 23ம் தேதி மூதனூர் சாவடியிலும், 24ம் தேதி பெரியகொட்டி முக்கலூர் தாயாதியர் சமுதாயகூடத்திலும், 25ம் தேதி கம்மவார் சமுதாய கூடத்திலும் நடைபெறுகின்றன.

 எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகாமில் குடும்பஅட்டை மற்றும் ஆதார்அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு இது வரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் விவரம்:   மாவட்ட திட்ட அலுவலர், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், விருதுநகர் மற்றும் கைப்பேசி எண். 73730 04974 - என்ற எண்ணை  தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News