சில்லி முட்டை
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டைகள் - 5,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம்- சிறிது,
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய்- 3,
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்,
சர்க்கரை - அரை டீஸ்பூன்,
கெட்டியான புளிக்கரைசல் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வேக வைத்த முட்டைகளின் ஓட்டை எடுத்து விட்டு முள்கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், புளிக் கரைசல், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அரை கப் கொதிநீரை ஊற்றி, சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்க்கவும். குழம்பில் முட்டைகளை மெதுவாக போடவும்.
நன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைக்கவும். ருசியான சில்லி முட்டை தயார்.
0
Leave a Reply