சீன ஓபன்: சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
சீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் சூப்பர் 1000 பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் சுற்றில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடாவை எதிர்கொண்ட சிந்து, 21-14, 9-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 56 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், தீர்மானிக்கும் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சிந்து வெற்றியை உறுதி செய்தார்.
0
Leave a Reply