இதயத்தை பாதுகாக்கும் சீத்தாப்பழம் .
சீத்தாப்பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.சீதாப்பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது.இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியை குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.
சீதா பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது. சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய், மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் இதயத்தை பாதுகாக்கும்.
சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.
0
Leave a Reply