ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர்.
டி.பி.மில்ஸ். சாலையில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு எதிரே ரெயில் தண்டவாளத்துக்கு அடுத்துள்ள மலையடிப்பட்டி சாலையை இணைக்கும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட சுரங்கப் பாதை பணிகள் இந்த ஆண்டு இறுதியிலேயே பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ரெயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கியதால் சுரங்கபாதை பணிகளை கைவிடும் நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ரெயில் பயனாளர்கள் சங்கம் சார்பில் தென்காசி எம்.பி எம்.எல்.ஏ. உள்ளிட்டமக்கள் பிரதிநிதிகள் மூலம் தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு,. முதற்கட்டமாக சுரங்கப்பாதையினுள் பதிக்கப்படும் 20 டன் எடையுடள்ள 11 கான்கி ரீட் பிளாக்குகளை வரிசைப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 30 டன் எடையை கையாளும் வகையிலான பிரேம்கள் இணைக்கப்பட்ட ராட்சத கிரேன் மூலம், கான் கிரீட் பிளாக்குகள் தூக்கி வைக்கப்படும்.
ரெயில்வே சுரங்கப்பாதை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான கல்வி நிலையங்கள், நூற்பாலைகள், சத்தி ரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மருத்துவதுணி உற்பத்தி செய்யும் ஏராளமான ஆலைகள் உள்ளது.சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
Leave a Reply