கால்பந்து அரங்கில் 1000 கோல் எட்ட, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இன்னும் 44 கோல் தான் தேவை.
கோல் மழை பொழிந்த, போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் ரெனால்டோ, 40., சர்வதேச அளவில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் (226 போட்டி, 143 கோல்)உள்ளார்.
அடுத்த இடங்களில் மெஸ்ஸி, (அர்ஜென்டினா, 196 போட்டி, 115 கோல்), அலி டேஜ் (ஈரான், 148 போட்டி, 108 கோல்), சுனில் செத்ரி (இந்தியா, 157 போட்டி, 95 கோல்) உள்ளனர். கிளப் அணிக்காக 813 + போர்ச்சுகல் அணிக்கு 143 சேர்த்து 1297 போட்டியில் 956 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் மெஸ்ஸி (896 கோல்) உள்ளார்.
1000 கோல் எட்ட, ரொனால்டோவுக்கு இன்னும் 44 கோல் தான் தேவை. .1000 கோல் அடித்து சாதிப்பேன்," என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்தார் வரும் 2026ல் நடக்கும் உலக கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார். 2016ல் போர்ச்சுகல் அணிக்கு யூரோ கோப்பை பெற்று தந்த இவர், முதல் முறை யாக உலக கோப்பையை வெல்லமுயற்சிக்கலாம்.
0
Leave a Reply