மொறுமொறுப்பாக சேப்பங்கிழங்கு சிப்ஸ்.
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்ய மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.
வெண்டைக்காயை கொண்டு சாம்பாரும் பொரியலும் செய்வதை விட பக்கோடா தயாரித்தால் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள். வெண்டைக்காய்களை மெல்லிய வட்டங்களாக நறுக்கி கடலை மாவு, உப்பு, காரத்தூள், கரம் மசாலா, சிறிது கருவேப்பிலை சேர்த்து 2 ஸ்பூன் தயிர் கலந்து எண்ணெய்யில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்க சுவையான பக்கோடா தயார்.
ஒரு ஸ்பூன் மைதா மாவும், அரை கப் பாலும் சேர்த்து கலந்து ஆப்பம் செய்ய ருசியும் கூடும். மென்மையாகவும் இருக்கும்.
முள்ளங்கியை துருவி எடுத்து, கோதுமை மாவோடு கலந்து தேவைக்கேற்ப மிளகாய், உப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால், சுவையாக இருக்கும்.
காலிபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சூடான நீரில் போட்டு ஊறவைத்து எடுத்து வடிகட்டி ஒரு துண்டில் பரப்பி நிழலில் உலர்த்தினால், புழுக்கள் இருக்காது.
0
Leave a Reply