25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


புடலங்காய் சாகுபடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புடலங்காய் சாகுபடி.

எளிதாக பயிராகும் காய் வகைகளில், கொடி வகைத் தாவரமான புடலங்காய் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் பெறலாம்.அனைவரும்சமையலுக்குப் பயன்படுத்தப்படும், பூசணி வகைகுடும்பத்தைச் சேர்ந்ததுபுடலங்காய். இதுவேகமாக வளரக்கூடியதும், அதிகமகசூல் தரும்பயிராகும்.

மண், தட்ப வெட்பநிலை: புடலங்காய்ஒரு வெப்பமண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரிசெல்சியஸ் வெப்பநிலைதேவைப்படும். இருமண்பாங்கான மண்வகைகள் சாகுபடிக்குஏற்றவை. மேலும்மித வெப்பமண்டலப் பகுதிகளிலும்சாகுபடி செய்யலாம்.

பருவம்

ஜூன்- ஜூலை மாதங்களும், டிசம்பர் -ஜனவரிமாதங்களும் சாகுபடிசெய்ய ஏற்றபருவமாகும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தைநன்றாக 3 அல்லது 4 முறை உழவுசெய்ய வேண்டும்.

கடைசிஉழவின்போது 20 டன்மக்கிய தொழுஉரத்தை இட்டு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர்அகலத்தில் வாய்க்கால்எடுத்து நிலம்தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர்நீளம், ஆழம், அகலம் கொண்டகுழிகளை எடுத்துமேல் மண்கலந்து நிரப்பிவைக்க வேண்டும்.

விதையளவு

ஒருஹெக்டேருக்கு 1.5 முதல் 2 கிலோ விதையளவுதேவைப்படும். விதையை 2 கிராம் பெவிஸ்டின்என்ற பூஞ்சாணமருந்துடன் விதைநேர்த்தி செய்யவேண்டும். ஒருகுழிக்கு 5 விதைகள்வீதம் ஊன்றவேண்டும். விதைநட்ட 8 முதல் 10 நாள்களில் முளைக்கத்தொடங்கிவிடும். ஒருகுழியில் நன்குவளர்ந்த 3 நாற்றுகளைமட்டும் விட்டுமற்ற நாற்றுகளைபிடுங்கி விடவேண்டும்.

உரமிடுதல்

ஒருஹெக்டேருக்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோதழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோசாம்பல் சத்தைஇட வேண்டும். மேலுரமாக 20 முதல் 30 கிலோதழைச்சத்தை பூபூக்கும் பருவத்தில்இட வேண்டும்.

நீர் பாய்ச்சுதல்

விதைஊன்றியவுடன் குடம்அல்லது பூவாளிவைத்து தண்ணீர்ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன்வாரம் ஒருமுறை வாய்க்கால்மூலமாக தண்ணீரைப்பாய்ச்ச வேண்டும்.

புடலைக் கொடிவளர்ந்து படருவதற்குஇரும்புக் கம்பிகளைவைத்து பந்தல்போடுவது அவசியமாகும். விதை முளைத்துகொடி வரும்போது,கொடியை மூங்கில்குச்சியோ அல்லதுமற்ற குச்சிகளைவைத்தோ ஊன்றுகொடுத்து பந்தலில்படர விடவேண்டும்.

இரண்டுஇலைப் பருவத்தில்எத்ரல் 250 பிபிஎம்என்ற வளர்ச்சிஊக்கியை தெளித்தால்பெண் பூக்கள்அதிகளவில் உற்பத்தியாகும். இதே வளர்ச்சிஊக்கியை ஒருவாரத்துக்கு 3 முறைதெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

புடலையில்பூசணி வண்டின்தாக்குதல் அதிகளவில்காணப்படும். 

இதைக்கட்டுப்படுத்த2 கிராம்செவின் அல்லதுகார்பரில் மருந்தை1 லிட்டர் தண்ணீரில்கலந்து தெளிக்கவேண்டும். பழஈயின் தாக்குதலைக்கட்டுப்படுத்த மாலத்தியான்1 சதவீதம் தெளிக்கவேண்டும்.

அறுவடை

விதைஊன்றிய 80 நாள்கள்கழித்து முதல்அறுவடை தொடங்கும். பின்னர் ஒருவார இடைவெளியில் 6 முதல் 8 அறுவடை கிடைக்கும். மேற்கண்ட வழிமுறைகளில்பயிரிட்டால் ஒருஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரைபுடலங்காய் மகசூலைப்பெறமுடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News