கொத்தவரைக்காய் சாகுபடி
ரகங்கள்-
பூசாசதபாகர், பூசாமவுசாமி, பூசாநவுபகார் மற்றும்கோமா மஞ்சரி
நல்லவடிகால் வசதியுடையமணற்பாங்கான (அ) வண்டல் மண்ணின்காரத்தன்மை 7.5-8.0 வரைஇருத்தல் வேண்டும். உவர்ப்பு நிலங்களில்வளரும் தன்மையுடையது.
விதைப்பு மற்றும் பருவம்-
ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் விதைகளைபார்களின் பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றவேண்டும்.
விதையளவு-
ஒருஎக்டருக்கு 10 கிலோவிதைஆறியஅரிசி கஞ்சியில்600 கிராம் ரைசோபியம்நுண்ணுயிர் கலவைக்கொண்டு நேர்த்திசெய்ய வேண்டும். விதைக்கும் முன்னர் 15 - 30 நிமிடம் நிழலில்உலர்த்த வேண்டும்.
நிலம் தயாரித்தல்-
நிலத்தைநன்கு உழுதுபண்பட செய்யவேண்டும். பின்பார் சால்களை 45 செ.மீஇடைவெளியில் அமைக்கவேண்டும்.
கடைசிஉழவின் போதுஒரு எக்டருக்குமக்கிய தொழுஉரம் 25 டன், அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 50 கிலோமற்றும் சாம்பல்சத்து 25 கிலோஅடியுரமாக இடவேண்டும்.
நடவுசெய்த 30-வதுநாளில் ஒருஎக்டருக்கு 20 கிலோதழைச் சத்தினைமேலுரமாக இடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு-
1. இலை தத்துப்பூச்சி
மீத்தைல்டெமட்டான்25 இசி1 மில்லி(அ)டைமெத்தோயேட்30 இசி1 மிலி மருந்தினைஒரு லிட்டர்தண்ணீரில் கலந்துதெளிக்க
வேண்டும்.
2. காய்ப்புழு
காரரைல் 2 கிராம் (அ) என்டோசல்பான் 2 மிலிஎன்ற அளவில்நீரில் கலந்துதெளிக்க வேண்டும்.
நோய் மேலாண்மை
இலைப்புள்ளி நோய்
மேங்கோசிப் 2 கிராம் என்றஅளவில் தண்ணீரில்கலந்து தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய்
15 நாட்களுக்கொருமுறை நனையும்கந்தகத் தூள் 2 கிராம் என்றஅளவில் தண்ணீரில்கலந்த தெளிக்கவேண்டும்.
மகசூல்
விதைத்த 90-வது நாளில் 7 – 10 டன் மகசூல்கிடைக்கும்.
0
Leave a Reply